விருச்சிகம் ராசி பலன்கள் (2017-2020)

விருச்சிகம் – பணவரவு:

விருச்சிகம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரை உங்கள் ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் கிடைத்து பையை நிரம்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை. தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுப்பிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புனித புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!