மீன ராசி பலன்கள் (2017-2020)

மீனம் – பிரமாதம்:

மீனம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி மற்றும் விரயாதிபதி. லாபாதிபதி 10ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். எப்பொழுது சொந்த வீடு அமையும்?என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை கும்பிடாத தெய்வம் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.