துலாம் ராசி பலன்கள் (2017-2020)

துலாம் – யோகம்:

துலாம் இராசி அன்பர்களே : 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் உங்கள் ராசி/லக்கினத்திற்கு 3ஆம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் சிறிது செலவுக்குப் பின் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீடுகட்டி புது வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கியில் கடன் உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதானமான பேச்சே எல்லாவற்றிலும் வெற்றி தரும். உங்கள் பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் அன்னியோன்னியம் அதிகரிக்கும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.

பரிகாரம்: ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!