கன்னி ராசி பலன்கள் (2017-2020)

கன்னி – அர்த்தாஷ்டம சனி:

கன்னி இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4-ம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார் என்று சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், ரோகம், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இதுவரை பணம் கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள். நலிவடைந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை சனி பகவான் செய்து காட்டபோகிறார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி.

பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.